×

`கள நிலவரத்தைப் புரிஞ்சுக்கோங்க தலைவரே’  தி.மு.க தலைமை முடிவால் கலங்கும் மா.செ-க்கள்! 

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் புதிய பிரச்சார அறிவிப்பால் கலங்கிப்போய் இருக்கிறார்கள் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள். 
 
 

தமிழக சட்டமன்றத் தேர்தல் இந்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் சூறாவளிப் பிராச்சாரத்தைத் தொடங்கி நடத்தி வருகின்றன. அதேபோல், கூட்டணிப் பேச்சுகளும் களைகட்டியிருக்கின்றன. பிரசாந்த் கிஷோரின் ஐபேக் சொல்படி நடக்கும் தி.மு.கவோ கார்ப்பரேட் கட்சி என்ற விமர்சனத்தை எதிர்க்கொண்டு வருகிறது. 


அந்தக் கட்சியின் `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற சமீபத்திய பிரச்சாரம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. வரும் 29-ம் தேதி முதல் ஸ்டாலின் இந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார். ஐபேக் டீமின் ஆலோசனையின் பெயரிலேயே இந்தத் திட்டத்தை அறிவித்திருக்கிறார் ஸ்டாலின் என உடன்பிறப்புகள் பலரே புலம்புவதை காதுபடக் கேட்க முடிகிறது.  `ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பிரச்சனைகளை மனுவாக எழுதிக் கொடுங்கள். அந்த மனுவை நானே நேரில் பெற்றுக்கொள்கிறேன். மக்கள் பிரச்சனைகள் தி.மு.க ஆட்சி அமைந்த முதல் 100 நாட்களில் தீர்க்கப்படும். அதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும்’ என்று சூளுரைத்திருக்கிறார் ஸ்டாலின். ஆனால், திமுக ஆட்சி அமைவது சந்தேகம்தான், அப்படியே ஆட்சி அமைந்தாலும்,  234 தொகுதிகளிலும் இருக்கும் மக்களின் பிரச்சனைகளை எப்படி முதல் 100 நாட்களில் தீர்க்க முடியும் என்று தி.மு.க மாவட்டச் செயலாளர்களே புலம்புகிறார்கள். 

`கட்சிக்காக செலவு பண்ண வேண்டியதுதான். ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை தலைமை எப்போது புரிந்துகொள்ள போகிறதோ!’ என புலம்புகிறார்கள் மாவட்டச் செயலாளர்கள். 

இது பற்றி ஒரு மாவட்ட செயலாளர் கூறுகையில்,``என்றைக்கு ஸ்டாலின் தலைவர் பதவியில் அமர்ந்தாரோ அன்றிலிருந்து எங்களுக்கு செலவுக் கணக்கு ஆரம்பித்துவிட்டது. சென்ற ஆண்டில் கொரோனா நிவாரணம், இணையவழி உறுப்பினர் சேர்க்கை, விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல், மக்கள் கிராம சபை, கனிமொழி, உதயநிதி பிரச்சாரம் என ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். இதில் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் தலைமையிடமிருந்து ஒரு ரூபாய் காசு வரவில்லை. இருக்கிற கொஞ்ச பேர் கைக்காசையும், இல்லாத பெரும்பாலானவங்க கடனை வாங்கியும் சமாளித்தோம். அதேநேரம் எதிர் தரப்பில் ஒரு சின்ன நிகழ்ச்சியில் தொடங்கி எடப்பாடி பிரச்சாரம் வரை எல்லாவற்றையும் லோக்கல் அமைச்சர்களும், தலைமையும் கவனித்துக் கொள்கிறார்கள். ஆனால் எங்கள் நிலைமை பரிதாபமாக இருக்கிறது’’ என்று புலம்புகிறார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News