×

அதிமுகவை புறக்கணிப்போம்!..  இணையதளத்தில் திமுக செய்த பித்தலாட்டம்!

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களின் தேவையை புரிந்து சிறப்பான ஆட்சியை செய்து வருகிறார். மக்களுக்கு நன்மை தரும் வகையில் பல நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை அமுல்படுத்தி வருகிறார். ஆனால், அதை பொறுத்துக்கொள்ள முடியாத திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக அரசுக்கும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்க்கும் எதிராக அவதூறான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

ஆனாலும், அதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிவிட்டார். முதல்வர் பழனிச்சாமி சேலம் எடப்பாடி அருகேயுள்ள பெருமாள் கோவிலில் சமீபத்தில் பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். எனவே, திமுக தலைவர் ஸ்டாலினும் வேகமாக தனது பிரச்சாரத்தை துவக்கியுள்ளார்.

சமீபத்தில், அதிமுகவை புறக்கணிப்போம் என்கிற தலைப்பில் ஒரு புதிய இணையதளத்தை திமுக துவங்கியது. இதில் சென்று ‘அதிமுகவை புறக்கணிப்போம்’ என்கிற லிங்கை கிளிக் செய்ய வேண்டும் என்பதுதான் நோக்கம். ஆனால், இந்த இணையதளத்திற்குள் நீங்கள் சென்று பார்த்தாலே 2 பேர் அதிமுகவை புறக்கணிப்போம் என்கிற லிங்கை கிளிக் செய்து விட்டது போல் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, அதிமுகவை புறக்கணிப்போம் என்கிற லிங்கை கிளிக் செய்யாவிட்டாலும் 2 வாக்குகள் அதிகரித்து விடுகிறது.

இப்படி ஒரு பொய்யான தகவலை உருவாக்கி, அதிமுகவை பலரும் புறக்கணிப்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கி திமுக பொய்யான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு ‘ஒன்றிணைவோம் வா’ என்கிற பெயரில் திமுகவினர் சேர்க்கை நடந்த போது குளறுபடிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News