×

வேளாண் சட்டம் : புரியாமல் போராடும் விவசாயிகள் ; போலியான போராட்டம் நடத்தும் திமுக..

 

கடந்த சில நாட்களாக தலைநகர் டில்லியையே ஸ்தம்பிக்கும் வகையில் விவசாயிகள் பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்த வரை, இந்த வேளாண் சட்டம் விவசாயிகளை பாதிக்காது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல முறை கூறிய பின்பும் அதை ஏற்காமல் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் என்ற நாடகத்தை வருகிறது.

விவசாய துறை தொடர்பான சட்டங்களை அந்தந்த மாநில அரசுகளே இயற்றி கொள்ளலாம் என வேளான் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 

1. விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், 

2. விவசாயிகள் விளைபொருட்கள் வாணிபம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம் 

3. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்.

என மூன்று சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ அரசு தெரிவித்துள்ள விளக்கத்தில் ‘விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த சட்டத்தை பொறுத்த வரை, தமிழகத்தில் கோகோ, கரும்பு, கோழிப் பண்ணை ஆகியவற்றில் நடைமுறையில் உள்ள பண்ணை ஒப்பந்த முறையை ஒழுங்குபடுத்த இச்சட்டம் வழிவகை செய்யும். மேலும், 2019-ம் ஆண்டு கொண்டு வந்த தமிழ்நாடு வேளாண்மை விளைபொருட்கள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணை மற்றும் சேவைகள் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டத்தின் நோக்கங்களை உறுதிபடுத்தும் விதமாகவும் இந்த சட்டம் அமைந்துள்ளது. குறிப்பாக, விவசாயிகளை கட்டாயப்படுத்தும் அல்லது பாதிக்கும் ஷரத்துக்கள் ஏதும் இச்சட்டத்தில் இல்லை’ என தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது. 

former

அதாவது, வணிகம் மற்றும் வர்த்தகச் சட்டத்தைப் பொறுத்தவரை, வேளாண் விளைபொருட்களை விவசாயிகள் trade area என அறிவிக்கப்பட்ட எந்த இடத்திலும் விற்பனை செய்ய இச்சட்டம் அனுமதிப்பதால், விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கு சுதந்திரம் கிடைக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும்,

குறைந்தபட்ச ஆதார விலையில் நடைபெறும் நெல் கொள்முதல்கள் பாதிக்காது, தொடர்ந்து நடைபெறும்.. 
உழவர் சந்தை திட்டம் தொடர்ந்து செயல்படுவதற்கு இந்த சட்டம் வழி வகை செய்கிறது..

பொது விநியோக திட்டத்தின் கீழ் விநியோகம் செய்ய விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதார விலையில் வேளாண் பொருட்கள் கொள்முதல் செய்வது தொடரும் 

எதிர்பாரத திடீர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழக அரசு ஓப்பந்த சாகுபடி முறையை கொண்டு வந்த போது அதுபற்றி கருத்து தெரிவிக்காத திமுக தற்போது அரசியல் நோக்கத்திற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை எதிர்த்து உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறது.

டில்லியில் போராட்டம் செய்யும் விவசாயிகள் யார் என்பதை திமுக புரிந்து கொள்ளவில்லையா இல்லை புரிந்து கொண்டே போராட்டம் செய்கிறதா என்பது திமுகவிற்கே வெளிச்சம்.

பஞ்சாப் மாநிலத்தில் முக்கிய விளைபொருட்களான நெல், கோதுமைக்கு 3 சதவீதம் சந்தைக்கட்டணம் மற்றும் 3 சதவீதம் உள்ளாட்சி மேம்பாட்டு மேல் வரியாக வசூலிக்கப்பட்டு அது அந்த வரி அரசு கணக்கில் சேர்க்கப்படுகிறது. மேலும், 2.5 சதவீதம் இடைத்தரகர்களுக்கு செல்கிறது. இவை அனைத்தும் பொருட்களை வாங்கும் வணிகர்களிடம் வசூலிக்கப்படுகிறது. தற்போது கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டப்படி, சந்தை வளாகம் தவிர வேறு எங்கும் இந்த கட்டணம் வசூலிக்க இயலாது. எனவே, இது வருவாயில் இழைப்புஏற்படும் என பஞ்சாப் மாநில அரசு கருதுகிறது. மேலும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சந்தைகளை இடைத்தரகர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்கள்தான், விவசாயிகளை தூண்டுவிட்டு போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மாநிலத்திற்கு கிடைக்கும் வரி கிடைக்காது என்பதால் பஞ்சாம் அரசும் இதற்கு துணை நிற்கிறது.

இதற்கு ஆதரவாகத்தான் தமிழகத்தில் திமுக போராட்டம் நடத்தி வருகிறது...
 

From around the web

Trending Videos

Tamilnadu News