×

ஊராட்சி தலைவரை தரையில் உட்கார வைத்த விவகாரம் - சிக்கலில் திமுக!

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள தெற்கு திட்டை ஊராட்சியின் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி(37). இவர் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர்.

எனவே, இவருக்கு துணைத்தலைவர் மோகன்ராஜன் சரியான அங்கீகாரம் வழங்காமல் இருந்து வந்துள்ளார்.  மேலும், கீழ் ஜாதியை சேர்ந்த ராஜேஸ்வரி ஆலோசனை கூட்டத்தில் இருக்கையில் அமரக்கூடாது, தேசியக்கொடி ஏற்றக்கூடாது எனக்கூறி ஊராட்சி நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். தலைவர் ராஜேஸ்வரியை எந்த பணியும் மோகன்ராஜன் செய்யவிடவில்லை.

caste

இந்நிலையில்தான் கடந்த ஜூலை மாதம் ஊராட்சி மன்ற கூட்டம் நடந்த போது ராஜேஸ்வரி கீழே அமர வைக்கப்பட்டிருந்த புகைப்படம் சமீபத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த செயலை சமூகவலைத்தளங்களில் பலரும் கண்டித்திருந்தனர். அதைத்தொடர்ந்து மோகன்ராஜன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். 

மோகன்ராஜன் திமுகவை சேர்ந்தவர் என்பதால் சமூக நீதி பேசும் திமுக இந்த செயலை கண்டிக்காமல் அமைதி காத்து வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் இது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் சாதித்து வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News