×

திமுக பொதுக்கூட்டத்திற்கு ஓ.வை.சி கட்சிக்கு அழைப்பு - கூட்டணி கட்சி தலைவர்கள் அதிருப்தி

 

தெலுங்கானாவை தலைநகராக கொண்ட இஸ்லாமிய பெரும்பான்மை கட்சி இஸ்லாமியர்களுக்கான தேசிய கட்சியா மாற தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலிலும் இக்கட்சி போட்டியிட்டு கணிசமான வெற்றியை பெற்றது.

சமீபத்தில் அக்கட்சியின் தலைவர் அசாவுதின் ஓவைசி தமிழக சட்டமன்ற தேர்தலிலும் எங்கள் கட்சியின் பங்கு இருக்கும் என கூறியிருந்தார். எனவே, அந்த கட்சி எக்கட்சியிடன் கூட்டணி அமைக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில், ஜனவரி 6ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள ‘இதயங்களை இணைப்போம்’ என்கிற மாநாட்டில் AIMIM கட்சியின் தலைவர் அசாதூன் ஓவைசி பங்கேற்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. திமுக சிறுபான்மையின் அணி தலைவர் மஸ்தான் ஹைதராபாத் சென்று அவருக்கு நேரில் அழைப்புவிடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.

இது திமுக கூட்டணியில் நீடிக்கும் மனித சிறுபான்மை கட்சிகளான மனித நேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல வருடங்களாக நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கும் போது வேறு மாநிலத்தில் இருந்து ஒரு கட்சியை அழைத்து வருவதா? என அவர்கள் பொங்கி வருகின்றனர். மேலும், பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் கொடுத்த அறிவுரையின் படியே ஓ.வை.சிக்கு அழைப்பு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் 3வது அணியாமல் தடுக்கவே திமுக இந்த திட்டத்தில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இது திமுகவிற்கு எதிரான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

மதசார்பில்லா கட்சி என என கூறிக்கொள்ளும் திமுக அரசியல் ஆதாயத்திற்காக வேறு மாநில, அதுவும் ஒரு இஸ்லாமிய கட்சியுடன் கூட்டணி அமைப்பது கூட்டணி கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த முறை காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளே கொடுக்கப்படும் என் அ செய்தி உலவும் நிலையில், தற்போது ஓ.வை.சியும் உள்ளே வந்தால் தங்களுக்கு சொற்ப தொகுதிகளே கிடைக்கும் என கூட்டணி கட்சிகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News