×

திமுக தலைவர் விஜய்: ரசிகர்களின் டுவிட்டர் டிரெண்டால் பரபரப்பு

திமுக தலைவர் விஜய் என ஒரு ஹேஷ்டேக் திடீரென ட்விட்டரில் மிக வேகமாக இன்று காலை முதல் டிரெண்டாகி வருகிறது. இன்று காலை தமிழக அளவில் டிரெண்ட் ஆகி வந்த இந்த ஹேஷ்டேக்  தற்போது இந்திய அளவில் டிரெண்ட் ஆகி விட்டது என்பதும் இன்னும் சில மணி நேரங்களில் இந்த ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது

 

திமுக தலைவராக மு. கருணாநிதி, அதனையடுத்து தற்போது அவரது மகன் முக ஸ்டாலின் இருந்து வரும் நிலையில் திடீரென திமுக தலைவர் விஜய் என ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக திமுக பிரமுகர்கள் இந்த ஹேஷ்டேக்கால் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது 

வலிமையான அதிமுக மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை எதிர்க்க முக ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திமுகவால் முடியாது என்றும் திமுக தலைமையை விஜய்யிடம் ஒப்படைத்தால் கண்டிப்பாக திமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்றும் விஜய் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர் 

மேலும் பிரசாந்த் கிஷோர் போன்ற கார்ப்பரேட் நிறுவனத்தை கோடிக்கணக்கில் கொடுத்து அணுக வேண்டிய அவசியமில்லை என்றும் திமுக தலைவர் பதவியை மட்டும் விஜய் இடம் கொடுத்துவிட்டால் ஒரே வருடத்தில் அவர் ஆட்சிக்கு ஆட்சியை கொண்டு வந்துவிடுவார் என்று விஜய் ரசிகர்கள் சரமாரியாக கருத்துக்களை பதிவு செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கருணாநிதி அவருக்குப் பின் அவரது மகன் முக ஸ்டாலின் அவருக்குப் பின் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் என பரம்பரை பரம்பரையாக திமுகவை வழிநடத்த திட்டமிட்டுள்ள நிலையில் திடீரென விஜய் ரசிகர்கள் ’திமுக தலைவர் விஜய்’ என டிரெண்டிங் ஏற்படுத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web

Trending Videos

Tamilnadu News