×

பள்ளியில் வைக்கப்பட்ட சிசிடிவி கேமராவை உடைத்த திமுக பிரமுகர் – எல்லாம் இதுக்குதானா ?

திமுக பிரமுகர் ஒருவர் மதுரையில் பள்ளியில் இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

திமுக பிரமுகர் ஒருவர் மதுரையில் பள்ளியில் இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை, சோழவந்தானை அடுத்த கீழமட்டையான் கிராமத்தின் திமுக கிளைச்செயலாளர் சித்தாண்டி. இவர் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று அந்த ஊரின் ஊராட்சி மன்றத் துணைத்தலைவராக உள்ளார். மது அருந்தும் பழக்கமுள்ள அங்குள்ள பள்ளிக்கு அருகே மது அருந்திவிட்டு பிரச்சனை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இதனால் பள்ளியில் தனியார் அமைப்பு ஒன்று சிசிடிவி கேமராக்களை வைத்துள்ளது. அதைப் பார்த்து கடுப்பாகிய சித்தாண்டி அவற்றை சிலமுறை உடைத்துள்ளார். ஆனாலும் திரும்ப வைத்ததை அடுத்து மீண்டும் அதை கல் எறிந்து உடைத்துள்ளார்.

இது சம்மந்தமாக அந்த அமைப்பு வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளிக்க, அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News