×

கொரோனா தொற்றால் திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் காலமானார்.

கடந்த ஜூன் 2ம் தேதி முதல் மூச்சுத் திணறல் காரணமாக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில்  திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் அனுமதிக்கப்பட்டிருந்தார். பரிசோதனையில் அவருக்கு கோவிட்-19 தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.

 

அவருக்கு கொரோனா தொற்று இருப்பதால், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் திமுக மூத்த தலைவர்கள் அவரை சந்திப்பதற்கு கட்டுப்பாடுகள் இருந்தன. இதனால் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் அவரை நலம் விசாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் பலனளிக்காமல் இன்று ( ஜூன் 10 ) மரணம் அடைந்துள்ளார். இன்னொரு சோகமான விஷயம், இன்று தான் அவரது 62வது பிறந்த நாள்.  பிறந்த நாளிலேயே அவர் மரணம் அடைந்திருப்பது திமுகவினர்களை பெரும் சோகத்திற்கு ஆழ்த்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News