×

திமுக எம்.எல்.ஏ பூங்கோதை தற்கொலை முயற்சி பின்னணி -  திடுக்கிடும் தகவல்!

மாவட்ட செயலாளர் பத்மநாபன் மற்றும் அவர்கள் ஆட்களின் துன்புறுத்தால்  திமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயற்ச்சி மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் சிவ பத்மநாத. இவர் மு.கஸ்டாலின் ஆதரவாளர். அதேபோல், பூங்கோதை ஆலடி அருணா எம்.எல்.ஏ கனிமொழியின் ஆதரவாளராக செயல்பட்டு வருபவர். 

சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் சிவ பத்மனாபன் கோஷ்டியைச் சோ்ந்த சிவன் பாண்டியவன் என்பவா்  ஆலரு அருணாவை கண்டபடி திட்டியதாகவும், தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால், அவமானப்பட்ட பூங்கோதை தற்கொலை முயற்சி எடுத்திருக்கிறார் என செய்திகள் கசிந்துள்ளது.

மேலும், கூட்டத்தில் கலத்துகொள்ள வந்த பெண் MLAக்கு உட்கார நாற்காலி கொடுக்கப்படவில்லை, மேலும் அவரை வெளியே போகச்சொல்லியும் கூச்சலிட்டுள்ளனர் மா.செவின் ஆட்கள். இதனால் மனமுடைந்து ஆலடி அருணா தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டத்திலிருந்து அவமானத்துடன் பூங்கோதை ஆலடி அருணா வெளியேறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. 

திமுகவின் உட்கட்சி பூசலால் பூங்கோதை ஆலடி அருணா தற்கொலைக்கு முயற்சித்துள்ளது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

From around the web

Trending Videos

Tamilnadu News