×

திமுக எம்பி கௌதமன் சிகாமணியின் ரூபாய் 8.6 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத் துறை அதிரடி நடவடிக்கை.!!

எம்பி கவுதம சிகாமணியின் ரூபாய் 8.6 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

 

எம்பி கவுதம சிகாமணியின் ரூபாய் 8.6 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்து வருவது திமுக. நாளுக்கு நாள் அறிக்கை ஒன்றின் மூலம் ஆளும் அதிமுக அரசை குற்றம் சாட்டி வருகிறார் ஸ்டாலின்.  ஆனால் திமுகவில் நடக்கும் ஊழல்கள், ஏமாற்று வேலைகளை கண்டும் காணாமல் இருந்து விடுகிறார். இந்த நிலையில் தற்போது சட்டத்திற்குப் புறம்பான வழியில் வருவாய் ஈட்டியதாக திமுக எம்பி கௌதம சிகாமணி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தொகுதியின் திமுக எம்பியான இவர் ரிசர்வ் வங்கியின் அனுமதி இன்றி வெளிநாடுகளில் முதலீடு செய்து வருவாய் ஈட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இப்படியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இவர் வெளிநாடுகளில் முதலீடு செய்ததன் மூலமாக கிடைத்த வருவாய் ரூபாய் 7.05 கோடியை மறைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக கவுதம சிகாமணிக்கு தமிழகத்தில் உள்ள அசையும் அசையா சொத்துக்கள் என கிட்டத்தட்ட ரூபாய் 8.6 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

திமுக எம்பி-ன் மீது அமலாக்கத் துறை எடுத்துள்ள நடவடிக்கை கட்சிக்குள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News