×

வன்னியர் சமுதாயத்தை இழிவாக பேசிய திமுக நிர்வாகி - வலுக்கும் எதிர்ப்புகள்

 

திமுக மேடைகளில் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்ற சாதியினரை இழிவாக பேசி வருவது அடிக்கடி நடந்துவருகிறது. வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு தர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாமகவினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வன்னியர் சமுதாயத்தில் படித்த பொறியாளர்கள் உள்ளனர் என்றால் அது கருணாநிதி போட்ட பிச்சைதான் என பெரம்பலூர் மாவட்ட ஆலத்தூர் ஒன்றிய திமுக செயலாளரும் , முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மைத்துனருமான கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளார். இதைத்தொடர்ந்து வன்னியர் சமுதாயத்தை அவர் இழிவுபடுத்தியிருப்பதாக வன்னியர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளது

மேலும், அவர் இப்படி பேசியதற்கு திமுக பகீரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஒருபுறம் சாதி அரசியல் செய்ய மாட்டோம், மதசார்பின்மையை கடைபிடிப்போம் என கூறி வரும் திராவிட கட்சியான திமுக, பிரச்சார மேடைகலில் சாதி பெயர்களை வைத்து அரசியல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News