×

திமுக கொள்கை பரப்பு செயலாளர் நயன்தாரா - மீண்டும் சர்ச்சையை கிளப்பும் ராதாரவி

நடிகர் ராதாரவி பல வருடங்களாக திமுகவில் இருந்தவர். அதன்பின் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டவர். ஜெயலிதாவின் மரணத்திற்கு பின் மீண்டும் திமுகவிற்கு தாவினார்.
 

ஒரு சினிமா விழாவில் நயன்தாராவை சர்ச்சையான கருத்தால் கிண்டலடித்ததால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அந்த கோபத்தில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

இந்நிலையில், திருப்பூரில் சி.ஏ.ஏ சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

தேர்தலில் இந்துக்கள் என்ற எண்ணத்துடன் வாக்களியுங்கள் இந்த நாடு இந்து நாடாக வாக்களியுங்கள்.  திமுகவில் தலைமை சரியில்லை.ஸ்டாலின் நடிகரும் இல்லை. அரசியல்வாதியும் இல்லை. வீரமணி உள்ளவரை திமுக உருப்படாது. தமிழகம் முழுவதும் 1500 பேரை வைத்துக் கொண்டு மிகவும் தொல்லை கொடுக்கின்றனர். திமுக கொள்கை பரப்பு செயலாளர் நயன்தாரா பற்றி பேசி விட்டேனாம். அதனால் என்னை கட்சியில் இருந்து தூக்கிவிட்டார்கள்’ என அவர் பேசினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News