×

தீபாவளிக்கு இதனால்தான் நான் வாழ்த்து கூறுவதில்லை  - ஆ.ராஜா பேச்சால் சர்ச்சை

 

தமிழகம் முழுவதும் நவ.14ம் தேதியான நேற்று தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஆனால், தீபாவளி என்பது தமிழர்களின் பண்டிகையே அல்ல என்கிற கருத்தை திமுக தொடர்ந்து முன் வைத்து வருகிறது. அதனால்தான் திமுக தலைவர் ஸ்டாலின் கூட மக்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறவில்லை. 

அதேபோல், இந்துக்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் திமுக ஆதரவாளர் சுப.வீரபாண்டியன் தன்னுடைய யுடியூப் பக்கத்தில் ‘தீபாவளி சித்தாந்தமும் கொண்டாட்டமும்’ என்கிற தலைப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

அதன் சர்ச்சையே அடங்காத நிலையில் திமுக ஆ.ராசா பேசும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில், கிறிந்துவர்கள், இஸ்லாமியர்கள் தங்களிம் மத கோட்பாட்டில் தவறு இருந்தால் ஏற்று அதை மாற்றிக்கொள்கிறார்கள்.  ஆனால், இந்துக்களின் பண்டிகை அறிவியலுக்கு எதிராக இருப்பதால், பகுத்தறிவுஜ்கு ஒவ்வாமல் இருப்பதால் நான் இந்துக்களின் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை’ என பேசியுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News