×

துரத்தும் தோல்வி பயம்?... ம.நீ.மவுக்குத் தூண்டில் போடும் திமுக

தோல்வி பயம் காரணமாகவே மக்கள் நீதி மய்யத்தை திமுக அணுகுவதாக விமர்சனம் எழுந்திருக்கிறது. 
 

சட்டமன்றத் தேர்தலை ஒட்டி கூட்டணியை அரசியல் கட்சிகள் இறுதி செய்து வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க கூட்டணியை இன்னும் பல கட்சிகள் உறுதி செய்யாமல் இந்தப் பக்கமா... அந்தப் பக்கமா என இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றன. இதனால், திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. 

200 தொகுதிகளில் நிற்கபோவதாக திமுக எடுத்திருக்கும் முடிவால்தான் கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தநிலையில், கமலின் மக்கள் நீதிமய்யத்தைக் கூட்டணிக்குள் கொண்டுவர திமுக திட்டம்போட்டுக் கொண்டிருக்கிறது. இதுபற்றி செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன், `தூது வந்தது; ஆனால், தலைவர்களிடம் இருந்து வர வேண்டும்’’ என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். 

இதுகுறித்து அரசியல் வட்டாரத்தில், ``வாக்கு சிதறிவிடக்கூடாது என்ற அச்சம் கொண்டிருக்கிறதா திமுக அல்லது மூன்றாவது அணியொன்று உருவாகிவிடுமோ என்ற பயமா என பல கேள்விகள் திமுகவுக்கு எழுந்திருக்கிறது. ஏற்கனவே இருக்கும் கூட்டணி கட்சிகளுக்கே சீட் கிடைக்குமா என்ற குழப்பம் இருக்கிறது திமுக கூட்டணியில். இதில் மக்கள் நீதி மையத்துக்கு எவ்வளவு சீட் போகும் என்று திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் திகைத்து நிற்கின்றன. 3% சதவீதம் வாக்கு வங்கி உள்ள மக்கள் நீதி மய்யத்தை அணுகும் அளவுக்கு கலக்கத்தில் திமுக உள்ளது என்று மட்டும் தெரிகிறது’’ என்கிறார்கள். 

From around the web

Trending Videos

Tamilnadu News