×

திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கைது – இட ஒதுக்கீடு சர்ச்சைப் பேச்சு எதிரொலி!

திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இட ஒதுக்கீடு மற்றும் பட்டியலின மக்கள் குறித்து இழிவாகப் பேசியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

 

திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இட ஒதுக்கீடு மற்றும் பட்டியலின மக்கள் குறித்து இழிவாகப் பேசியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி பேசிய திமுகவின் அமைப்புச் செயலாளர்ஆர் எஸ் பாரதி, இட ஒதுக்கீடு என்பது திமுக மற்றும் திராவிட இயக்கம் போட்ட பிச்சை எனவும் அதனால் இப்போது ஒடுக்கப்பட்ட மக்கள் நீதிபதியாக வந்து அமர்ந்து இருப்பதாகவும் பேசினார். அவரின் இந்த பேச்சு பலத்த சர்ச்சைகளை எழுப்பிய நிலையில் அவரை எஸ்.சி மற்றும் எஸ் டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும் எனக் குரல்கள் எழுந்தன.

இந்த பேச்சுக் குறித்து ஆதித்தமிழர் பேரவை அமைப்பைச் சேர்ந்த கல்யாண் குமார், மார்ச் மாதம், காவல்துறையில் புகார் அளித்தார் இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு ஆர்.எஸ்.பாரதி மீது எஸ்.சி.மற்றும் எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் இன்று காலை ஆர் எஸ் பாரதி தனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆலந்தூர் வீட்டில் கைது செய்யப்பட்ட அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யும் முயற்சி நடைபெற்று வருகிறது.  கைதின் போது செய்தியாளர்களிடம் பேசிய  அவர் ‘ இந்த கைது உள்நோக்கம் கொண்டது. நான் கொரோனா கருவிகள் வாங்கியது சம்மந்தமாக ஊழல் நடந்திருப்பது சம்மந்தமாக பேசியதால் கைது செய்யப்பட்டு இருக்கிறேன். நான் இப்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தேன்.’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News