×

தமிழ் புத்தாண்டு அரசியல்... குழப்பத்தை ஏற்படுத்தும் தி.மு.கவின் புதிய முடிவு

தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தை முதல் தேதி புத்தாண்டாக அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் மகளிரணிச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

 

கடந்த 2008ஆம் ஆண்டு தை மாதம் முதல் நாளான ஜனவரி 14 ஆம் தேதியை தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடப்படும் என அன்றைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

மீண்டும் அ.தி.முக ஆட்சியமைத்தபோது, ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வரும் சித்திரையில் இருந்து, தை மாதம் முதல் நாளான ஜனவரி 14, மீண்டும் தமிழ் புத்தாண்டாக மாற்றப்படும் என கனிமொழி தெரிவித்துள்ளது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

சித்திரை முதல் நாளான ஏப்ரல் 14 தான் தமிழர்திருநாளாக இருக்க வேண்டும் என்ற தமிழறிஞர்களும்,பல தரப்பு மக்களும் கோரிக்கை வைத்தனர். இந்தநிலையில், மீண்டும் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், தி.மு.க மீண்டும் தமிழ் புத்தாண்டு அரசியலைக் கையில் எடுத்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News