×

தமிழக முதல்வர் பயப்பட வேண்டாம்.. ஏனென்றால் – இயக்குனர் அமீர் வேண்டுகோள் !

தமிழக அரசு நீண்டநாட்களாக வழஙகப்படாமல் இருந்த தமிழக அரசு விருதுகளை உடனடியாக வழங்கவேண்டும் என இயக்குனர் அமீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

தமிழக அரசு நீண்டநாட்களாக வழஙகப்படாமல் இருந்த தமிழக அரசு விருதுகளை உடனடியாக வழங்கவேண்டும் என இயக்குனர் அமீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாய்நதி என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட இயக்குனர் அமீர் முக்கியமானக் கருத்து ஒன்றை பேசியுள்ளார்.

விழாவில் பேசிய அவர் ‘தமிழ் சினிமாவில் இருந்து வந்த கலைஞர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தமிழ் சினிமாவுக்கு நிறைய செய்துள்ளனர். ஆனால் அவர்களை சுற்றி இருந்தவர்கள் தங்களுக்கு நல்லது செய்து கொண்டார்கள். ஆனால் தமிழ் சினிமாவுக்கு நல்லது செய்யவில்லை.

தமிழ் சினிமாவுக்கு நல்லது செய்வார்கள். ஆனால் அவர்கள் எல்லா நன்மைகளையும் பெற்றுக் கொண்டு நமக்கு எதிராகவே டிவீட் செய்கிறார்கள். அரசியலுக்கு வருகிறார்கள். தமிழ் சினிமாவின் இரு மூத்த நடிகர்களும் அரசியலுக்கு வந்துவிட்டார்கள். இப்படி இருக்கையில் அவர்கள் எப்படி தமிழ் சினிமாவுக்கு வழங்க வேண்டிய விருதுகளை வழங்குவார்கள். இந்த அச்சத்தால்தான் தமிழக அரசு விலகி நிற்கிறதோ எனத் தோன்றுகிறது.

ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அச்சப்பட தேவையில்லை. ஏனன்றால் அவர் எந்த பால் போட்டாலும் திருப்பி அடிக்கிறார்.’ எனப் பேசியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News