×

ஆபாசப் படங்களை அனுப்பாதீர்கள்… டயர்டாகி விட்டேன் – பிரபல நடிகை புல்மபல்!

பிரபல மலையாள நடிகை அனுமோல் தனக்கு ஆபாசப்படங்களை அனுப்புவர்கள் குறித்து கோபமாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

 

பிரபல மலையாள நடிகை அனுமோல் தனக்கு ஆபாசப்படங்களை அனுப்புவர்கள் குறித்து கோபமாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

சினிமா நடிகைகள் தங்கள் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் தீவிரமாக இருந்து வருகின்றனர். ஆனால் அதன் மூலம் அவர்களுக்கு நிறைய தொல்லைகள் ஏற்படுகின்றன என்பதும் மறுக்க முடியாது. தொடர்ந்து ஆபாச மெஸேஜ்கள் மற்றும் ஆபாச வீடியோக்களை பேக் ஐடிகளில் இருந்து அனுப்பும் வழக்கம் சில விஷமிகளிடம் உண்டு.

இந்நிலையில் இதுபோல ஆபாச வீடியோக்களை அனுப்புவர்கள் குறித்து மலையாள நடிகையான அனுமோல் ‘அந்தரங்க புகைப்படங்களை எனக்கு அனுப்புபவர்கள் இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அப்படி அனுப்புவர்களை பிளாக் செய்து டயர்ட் ஆகிவிட்டேன். ஏதோ கடவுளின் பரிசு போல தன்னுடைய ஆபாச வீடியோக்களை தொடர்ந்து ஒருவர் எனக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்.அயோக்கியர்களே இது அருவருப்பை மட்டுமே தரும்’ எனத் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News