×

நான் செய்வதை செய்யுங்கள்... கீர்த்தி சுரேஷிற்கு சவால் விட்ட சமந்தா!

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 

கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் சமந்தா தனக்கு போர் அடிக்காமல் இருக்க வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார். பின்னர் நாய்குட்டிகளுடன் விளையாடிய வீடியோ, யோகா புகைப்படங்கள் உள்ளிட்டவரை வெளியிட்டு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது   கிரீன் இந்தியா சேலஞ்ச் ஏற்று மாமனார் நாகார்ஜூனா உடன் சேர்ந்து மரக்கன்று நட்ட புகைப்படத்தை இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு தன்னை போலவே நீங்களும் மரக்கன்றுகள் நடுங்கள் என நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் தனது நெருங்கிய தோழி ஷில்பா ரெட்டி ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்துளளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News