×

மகனுடன் சீயான் நடிக்கும் புது படம் 
என்ன கேரக்டர் தெரியுமா..?

 
vikramthruvksraj

சேது படத்தில் ஆரம்பித்த சீயான்....கேரக்டர் நடிகர் விக்ரமுக்கு இன்று வரை அப்படியே செல்லப்பெயராக மாறியுள்ளது. இவரது படங்கள் என்றாலே ஏதாவது ஒரு வித்தியாசம் இருக்கும் என்று ரசிகர்கள் நம்பி திரையரங்கிற்கு வருவார்கள். அவர்களை ஏமாற்றாத வகையில் விக்ரமும் கமலைப் போல படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டிவருகிறார். உதாரணமாக சேது, காசி,  அந்நியன், ஐ, தெய்வத்திருமகள், இருமுகன், கடாரம் கொண்டான், கோப்ரா போன்ற படங்களைச் சொல்லலாம். இவற்றில் கடாரம் கொண்டான் படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் விளங்குபவர். இவரது திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் இவர் சமீபத்தில் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் ரசிகர்களால் பெரிதும் ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

தொடர்ந்து விக்ரம் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் சீயான் 60 படத்தில் அவரின் மகன் துருவ் விக்ரமுடன் நடித்து வருகிறார். 
இந்நிலையில் தற்போது அப்படத்தில் அவர் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

இதில் விக்ரமுக்கு கேங்ஸ்டர் ரோலாம். மேலும் கார்த்திக் சுப்ராஜ் இயக்கிய பீட்சா திரைப்படத்தை தவிர மற்ற எல்லா படங்களிலிலும் கேங்ஸ்டர் ரோல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் வழக்கம்போல் பெரிதும் ஆவலுடன் இருக்கின்றனர். 

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இது கல்கி எழுதிய வரலாற்று காவியம் என்பது குறிப்பிடத்தக்கது. 

From around the web

Trending Videos

Tamilnadu News