×

லாபம் படத்துல விஜய் சேதுபதி ரோல் என்னன்னு தெரியுமா..?

 
vijaysethupathi

கொடுக்கற வேடம் எதுவென்றாலும் சரி. அதை இயல்பாக மிக எளிதாக அசால்டாக நடித்துக் கொடுப்பவர் தான் விஜய் சேதுபதி. இவர் நடித்தாலே படம் ஹிட் என்று சொல்லும் அளவுக்கு மளமளவென வளர்ந்து விட்டார் இவர். ஆரஞ்சுமிட்டாய், பண்ணையாரும் பத்மினியும், சீதக்காதி என்று ஒரு சில படங்கள் கமர்சியல் ஆக ஹிட் ஆகவில்லை என்றாலும் படத்தில் ஒருவித ரசனை இருக்கும். விஜய் சேதுபதிக்காகவே இப்படங்களைப் பார்க்கலாம். கிட்டத்தட்ட விருதுக்குரிய படம் போல இருக்கும். 


படத்தில் மற்ற ஹீரோக்களைக் காட்டிலும் டயலாக்கை மிக எளிதாக எல்லோருக்கும் எளிதில் புரியும் வகையில் சாதாரண வார்த்தைகளைப் போட்டு சின்ன சின்ன வாக்கியங்களாகப் பேசி தனக்கென ஒரு தனி பாணியைக் கையாண்டு சினிமாவில் முன்னணி ஹீரோவாக மாறியவர் தான் இவர். இவருக்கென்றே ரசிகர் பட்டாளம் நிறைய உண்டு. சமீபத்தில் தளபதி விஜயுடன் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் வெளுத்து வாங்கி விட்டார் விஜய்சேதுபதி என்றே சொல்லலாம். அவரது டயலாக் டெலிவரியும், கண்பார்வையும், நையாண்டியும், நக்கலும் ரசிகர்களை விஜய் ரசிகர்களுக்கு சரிசமமாக விசிலடிக்க வைத்தது. படமும் மெகா ஹிட் ஆனது. படத்துக்குப்படம் தேர்ந்தெடுத்து நடித்துவரும் விஜய்சேதுபதி படம் தோல்வி அடைந்தாலும் கூட அதுபற்றி கவலைப்பட மாட்டாராம். எதற்காக அந்தப் படம் தோல்வி அடைந்தது என்று எண்ணிப்பார்த்து, திரும்பவும் அதுபோன்ற தவறுகள் வராதவாறு பார்த்துக்கொள்வாராம் விஜய்சேதுபதி.

தற்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படம் லாபம். புறம்போக்கு படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியை ஜனநாதன் இயக்கி உள்ளார்.

இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். ஜகபதி பாபு, சாய் தன்ஷிகா, கலையரசன் உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இமான் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு என்ன வேடம் என்று தெரிய ஆர்வமாக உள்ளதா? சமூக ஆர்வலர் வேடம் தான்.

From around the web

Trending Videos

Tamilnadu News