×

எடப்பாடி பழனிச்சாமியின் முக்கிய 10 சாதனைகள் - என்னென்ன தெரியுமா?...

 

தமிழக முதல்வராக பதவி ஏற்று 4 ஆண்டுகளுக்கும் மேல் வெற்றிகரமாக ஆட்சியை நடத்திமுடித்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் அரசியலில் படிப்படியாக உயர்ந்து முதல்வர் பதவியை பெற்றுள்ளார். இந்த 4 ஆண்டுகளில் இவர் சில சாதனைகளை செய்து முடித்துள்ளார். 

1. காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு

காவிரி மற்றும் டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட்ட நிலப் பகுதிகளாக அறிவித்தது முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது. இந்த அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

2. குடிமராமத்து திட்டம்

பல கோடி செலவில் குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தியது. இதன் மூலம் நீர்நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் மூலம் 90 சதவீத ஏரிகள் மற்றும் குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது.

3. கொரோனா வைரஸை கையாண்ட திறமை

துவக்கம் முதலே கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பொதுமக்கள் என்னென்ன செய்ய வேண்டும் என தொடர்ந்து அரசு வலியுறுத்தி வந்தது. அதனால் தமிழகத்தில் கொரோனா அதிகம் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது. அதேபோல், இந்தியாவிலேயே அதிக கொரோனா சோதனைகளும் தமிழகத்தில்தான் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டோருக்கும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

4. முதலீடுகள் : 

கொரோனா வைரஸ் பரவலால உலக நாடுகள் பொருளாதார சரிவுகளை சந்தித்துள்ள நிலையில், தமிழக ரசு 3 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்து தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை அதிகரித்தது.

5. அத்திக்கடவு அவினாசி திட்டம் : 

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் கனவு திட்டமான அத்திக்கடவு அவினாசி திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார்.

6. மருத்துவ கல்லூரிகள் உருவாக்கம்:

தமிழகத்தின் பல பகுதிகளில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. எனவே, மருத்துவ படிப்புகளுக்கு மற்ற மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை தடுக்கப்பட்டுள்ளது.

7. பிளாஸ்டிக் பைகளுக்கு தடை : 

தமிழகத்தில் ஒருமுறை மட்டும் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம் மண் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடாமல் தடுக்கப்பட்டுள்ளது.

8. பொதுத் தேர்வுகள் ரத்து :

கொரோனா பரவாமல் தடுக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதோடு, 10, 11ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதன்  மூலம் மாணவ, மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்படாமல் தடுக்கப்பட்டது.

9. 6 புதிய மாவட்டங்கள் அறிவிப்பு:

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றது முதல் தற்போது வரை புதிய 6 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

10. உழவன் ஆப் (செயலி) :

தமிழகத்தில் உள்ள விவசாயிகள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள ‘உழவன் ஆப்’ என்கிற மொபைல் செயலியை எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் செய்துள்ளார்.
இந்த செயலி மூலம் விவசாயிகள் தங்களின் குறைகளை அரசுக்கு தெரிவித்து தீர்வு காணவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News