×

மாநாடு படத்திற்கு வில்லன் யார் தெரியுமா..? 

 
simbu1

சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். இவர் வில்லனாக நடித்தால் யாருக்குத் தான் குஷியாக இருக்காது? அப்பப்பா...நடிகர் திலகத்தை மிஞ்சி விடும் இவரது நடிப்பு...! இவரது கேரக்டரைப் போல் இப்போது சின்னத்திரையில் வருங்கால நட்சத்திரங்கள் மிமிக்ரி செய்து நடித்துக் காட்டுகிறார். அந்த அளவு இவர் ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்து  விட்டார். இவர் முதன்முதலாக வில்லனாக நடிக்கும் படம் இதுதான். ஏற்கனவே இவர் ஒரு மாதிரி...அதாவது, அவருடைய பாடி லாங்குவேஜே தனி நடிப்பைக் கொண்டு வரும். இன்னும் சொல்லப்போனால், அவரது நடிப்பே வேற லெவல் தான்;. 

வாலி, குஷி பட புகழ் இயக்குனர் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். இவரை வில்லனாக வெண்திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்றே சொல்லலாம். சிம்புவிற்காக படம் பார்க்க வரும் ரசிகர்கள் ஒருபுறம் இருக்க, எஸ்.ஜே.சூர்யாவுக்காக படம் பார்க்கவும் ரசிகர்கள் வருவார்கள். தியேட்டரில் பெரிய மாநாடு நடக்கும் அளவு கூட்டம் வரும் என்று தான் எண்ணத் தோன்றுகிறது. கொரோனா முடிந்தால் தானே தியேட்டர் செல்வது என்ற நிலை வரும்...சீக்கிரம் முடியட்டும்...!

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மாநாடு படத்தின் முதல் பாடல் ரம்ஜான் பண்டிகையன்று வெளியிடப்படும் என அறிவித்திருந்த படக்குழு, அந்த சமயத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு தாயார் மரணமடைந்ததால், அப்பாடல் வெளியீடை தள்ளிவைத்தனர். 

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனை தனது சமூக வலைதள பதிவு மூலம் உறுதிப்படுத்தி உள்ள வெங்கட் பிரபு, படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து பின்னணி பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாம்.
மாநாடு படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். 
 

From around the web

Trending Videos

Tamilnadu News