×

கொரோனா நோயாளிகளுக்கு என்ன உணவு தருகிறார்கள் தெரியுமா ?

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் உணவுப் பட்டியல் வெளியாகியுள்ளது.

 

உலகம் முழுவதும் கொரொனா வைரஸால் 5.25 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இந்த எண்ணிக்கை நேற்றுவரை 29  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து தப்பிப்பதற்கு சிகிச்சையோடு ஆரோக்யமான நோய் எதிர்ப்புத்திறனுடன் கூடிய உணவும் முக்கியமானது. அந்த வகையில் மருத்துவமனைகளில் கொரொனா வைரஸ் நோயாளிகளுக்கு அளிக்கபப்டும் உணவு விவரங்கள் வெளியாகியுள்ளன.

  • காலை 7 மணி – இஞ்சி மற்றும் எலுமிச்சைபோட்டு கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீர்
  • காலை 8.30 மணி – 2 இட்லி (சாம்பார் மற்றும் வெங்காய சட்னி), சம்பா ரவை கோதுமை உப்மா, 2 முட்டை, பால், பழரசம்
  • காலை 11 மணி – சாத்துக்குடி ஜூஸ், இஞ்சி மற்றும் எலுமிச்சையோடு உப்புக் கலந்து கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீர்
  • மதியம் 1 மணி – 2 சப்பாத்தி, புதினா சாதம் (1 கப்), வேகவைத்த காய்கறிகள் (1 கப்), பெப்பர் ரசம் (1 கப்), உடைத்த கடலை (1 கப்)
  • மாலை 3 மணி – மிளகுடன் மஞ்சள் கலந்த வெந்நீர்
  • மாலை 5 மணி – கொண்டைக்கடலை சுண்டல்
  • இரவு 8 மணி -  2 சப்பாத்தி (ஆனியன் சட்னி) இட்லி அல்லது சம்பா கோதுவை ரவை உப்மா, 1 முட்டை

From around the web

Trending Videos

Tamilnadu News