×

நண்பர் அஜித்துனு விஜய் சொன்னதும் என்ன நடந்தது தெரியுமா? - வெளிவராத செய்தி

மாஸ்டர் பட விழாவில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது.
 

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விஜய் கோட் சூட் அணிந்திருந்தார். இதுபற்றி மேடையில் பேசும் போது ‘நண்பர் அஜித் போல் கோட் சூட் அணிந்து வந்துள்ளேன்’ எனக்கூறி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினர்.  அதைக்கேட்டு அரங்கில் இருந்தவர்கள் கை தட்டி ஆர்ப்பரித்தனர்.

இந்நிலையில், இந்த விழாவை தொகுத்து வழங்கிய மிர்ச்சி விஜய் சமீபத்தில் ஒரு யுடியூப் சேனலில் பேசுகையில் ‘விஜய் சார் நண்பர் அஜித்தின்னு சொன்னதும் அரங்கில் அப்படி ஒரு கைதட்டல். குறைந்தது 5 நிமிடம் கைதட்டல் நிற்கவே இல்லை. இதைக்கண்டு விஜயே ஆச்சர்யப்பட்டார். ஆனாலும் அவர் அதை காட்டிக்கொள்ளவில்லை. ஆனால், அரங்கில் இருந்தவர்கள் கைதட்டியதை தொலைக்காட்சியில் எவ்வளவு நேரம் காட்டினார்கள் என தெரியவில்லை’ என அவர் பேசினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News