×

லாக்டவுனில் தல அஜித் என்ன செய்கிறாய் தெரியுமா?... கேட்டா ஆச்சர்யப்படுவீங்க!
 

 

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுவென நடைபெற்று வந்த நிலையில், கொரோனா விவகாரம் தொடர்பாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், படப்பிடிப்பு இல்லாத இந்த 5 மாதங்களில் அவர் வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. 

அஜித்திற்கு செடி வளர்ப்பது மிகவும் பிடிக்குமாம். வீட்டில் பூ தோட்டம் அமைத்து அதற்கான வேலையெல்லாம் அவரே செய்து வருகிறாராம். இதில், 75 வகையான பூக்கள் இடம் பெற்றுள்ளதாம். மேலும் சில மூலிகைகளையும் அவர் வளர்த்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், அடுத்த படத்திற்காக சில இயக்குனர்களிடம் கதை கேட்டார். அதில், சுதா கொங்கரா கூறிய கதை பிடித்திருந்ததால் அதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News