×

சசிகலா எப்போது வெளியாகிறார் தெரியுமா? - சிறை நிர்வாகம் தகவல்

 

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா தோழியாக இருந்தவர் சசிகலா. ஏறக்குறைய 35 வருடங்கள் அவருடனேயே பயணித்தவர். போயஸ்கார்டன் வீட்டில் அவருடனே தங்கியிருந்தவர். அதிமுகவை பொறுத்தவரை ஜெ.விற்கு பின் சசிகாலதான் என்கிற நிலையை அவர் உருவாக்கி வைத்திருந்தார்.

4 வருடங்களுக்கு முன்பு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று அவரும், அவரின் உறவினர் இளவரசியும் பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், வருகி ஜனவரி 27ம் தேதி விடுதலை ஆவது தெரியவந்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவல் தெரியவந்துள்ளது. நீதிமன்றம் அவருக்கு அபாரதமாக விதித்த ரூ.10 கோடியை அவர் செலுத்தினால் ஜனவரி 27ம் தேதியும், செலுத்தவில்லை எனில் பிப்ரவரி 27ம் தேதியும் அவர் விடுவிக்கப்படுவார் என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சசிகாலா வெளியே வந்தால் அதிமுகவில் பல அதிரடி திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News