Categories: Cinema News latest news throwback stories

சிவாஜியோட வயிறு நடிச்ச படம் எதுன்னு தெரியுமா? அடடே அது சூப்பர்ஹிட்டாச்சே? இப்படி எல்லாமா நடந்தது?

பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் இயக்குனர் ரகுவிடம் சிவாஜியை சந்தித்த அனுபவம் பற்றி கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

சிவாஜியை தனியா சந்திச்ச வாய்ப்பு ஒரே ஒரு தடவை கிடைச்சது. அவரு கண்ணைப் பார்த்து பேச முடியாது. அந்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை மற்றவர்கள் எப்படி ரசிச்சார்களோ தெரியாது. நான் ரசிச்சது வேற.

அதாவது அதை சொன்னா பைத்தியம்பாங்க. அவரோட நடிப்புக்கு அந்தப் படத்துல ஒரு சீன். சிவாஜி முருகப்பெருமானை தரிசனம் பண்ணிக்கிட்டு இருக்கும்போது ஏ.கருணாநிதி ஓடி வருவாரு.

Veerapandiya kattapomman

‘பிரபு… பிரபு… எட்டப்பன் காட்டிக் கொடுத்துட்டான்’னு சொல்வாரு. அந்த முகத்துல ஒரு வலி வருது. வேதனை வருது. ‘நம்முடைய மண்ணில இருக்குறவனே தன்னைக் காட்டிக் கொடுத்துட்டானே…’ அப்படின்னு வேதனைப்பட்டு பேசுவாரு.

நானும் அவனும் ஒரே மண்ணுல பிறந்துட்டோம். அப்படி சொல்லிட்டு கோபம் வரும்போது இந்த வயிறு நடிச்சு எந்த மனுஷனையும் பார்க்கல. அது சுருங்கி சுருங்கி விரியும்.

ஒரு மனுஷனா அப்படி நடிக்கிறது? அவரு கடைசில கத்துவாரு போர் போர் போர்னு. அது மட்டுமல்ல. உலகத்துலயே பாடிலாங்குவேஜ்ல அனிமலை அடாப்ட் பண்றவரு சிவாஜி. கர்ணன்ல நிக்கும்போது பார்த்தீங்கன்னா குதிரை நிக்கற மாதிரியே இருக்கும்.

யாருமே அப்படி உலகத்துலயே நிக்க மாட்டாங்க. ஆனா அவரு நிப்பாரு. அனிமல் பாடி லாங்குவேஜைப் பார்க்குறாரு. அதை அடாப்ட் பண்றாரு. இப்படி ஒரு மனிதரை ரசிச்சிட்டு நேரா போய் நின்னு சார் நீங்க அந்த சீன்ல எப்படி நடிச்சீங்கன்னு கேட்க முடியுமா?

இதையும் படிங்க… மோகன் நடிக்க வரலேன்னா என்ன வேலை பார்த்திருப்பார் தெரியுமா? கமல் படம் இவரால் தடையா?

அப்பா என்னைக்காவது ஞாயிற்றுக்கிழமை சிவாஜி சந்திச்சிப் பேசப்போனார்னா நான் தான் போய் பிக்கப் பண்ணுவேன். அப்போ சிவாஜியை பார்த்து வணக்கம் தான் சொல்ல முடியும். என்னால நேருக்கு நேரா பார்த்துப் பேச தைரியம் இல்லை. அப்பா என்னைப் பார்த்துட்டாருன்னா வண்டிக்கிட்டப் போயிடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். நடிகர் வி.கே.ராமசாமியின் வளர்ப்பு மகன் இயக்குனர் ரகு என்பது குறிப்பிடத்தக்கது.

 

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v