×

சமந்தாவுக்கு பிடிச்ச ஹீரோ யார் தெரியுமா?

 
samantha

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் படு பிசியாக நடிக்கும் ரசகுல்லா சமந்தா, தற்போது இந்தியில் பேமிலிமேன் 2 மூலம் வெப் தொடரில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது பேட்டி ஒன்றில், பேமிலிமேன் 2 மூலம் வட இந்திய ரசிகர்களை சந்திக்கப் போகிறேன். இந்தியில் ரன்வீர் கபூர் ஜோடியாக நடிக்க ஆசை...

என்னுடன் நடித்த ஹீரோக்களில் தனித்திறமை யாருன்னா...அது விஜய்;னுதான் சொல்வேன். அவர் ஷ_ட்டிங் ஸ்பாட்டில் ரொம்ப சிம்பிளா இருப்பார். எந்த சம்பந்தமும் இல்லாதது போல இருப்பார். ஆனா, ரெடி ஷாட்...ன்னு கிளாப் சொல்லிட்டா போதும். மனிதர் புயல் மாதிரி நடிக்க ஆரம்பித்துவிடுவார். கேரக்டராவே மாறி விடுவார். நமக்கே ரொம்ப ஷாக்காயிடும். பல தடவை அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்...

சூர்யா, மகேஷ்பாபு ஆகியோருடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். இருவரும் ரொம்பவே வளர்ந்த நடிகர்கள். ஆனாலும் நடிக்கும்போது புது நடிகர்களைப் போல சின்ன சின்ன விஷயங்களையும் கத்துக்கிட்டு நடிப்பதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். இவங்க கிட்ட நான் கத்துக்கிட்ட விஷயம்னா இதுதான். 

From around the web

Trending Videos

Tamilnadu News