×

திருட போன வீட்டில் மட்டையான நபர் – தட்டி எழுப்பியது யார் தெரியுமா?

மும்பையில் ஒரு வீட்டுக்குத் திருடப்போன நபர் அங்கேயே தூங்கியதால் மறுநாள் காலை போலீஸ் வந்து கைது செய்துள்ளது.

 

மும்பையில் ஒரு வீட்டுக்குத் திருடப்போன நபர் அங்கேயே தூங்கியதால் மறுநாள் காலை போலீஸ் வந்து கைது செய்துள்ளது.

மும்பையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு மும்பை சென்ட்ரல் பகுதியை சேர்ந்த சஞ்ஜீவ் என்பவர் திருடுவதற்காக சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த வெளிநாட்டு உயர்ரக மதுபானங்களைப் பார்த்து மயங்கி அதை எடுத்துக் குடிக்க ஆரம்பித்துள்ளார்.

இதனால் போதையில் மயங்கி அந்த வீட்டிலேயே தூங்கி விட்டார். அந்த வீட்டுக்கு உரிமையாளர் அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் வேறு ஒரு வீட்டில் இருந்ததால் காலையில் அங்கு சென்று பார்த்தபோது இவர் தூங்கிக் கொண்டிஉருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதையடுத்துப் போலீஸார் வந்து அவரை எழுப்பி கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News