×

விஜய் பாடலை பாடி அட்லிக்கு முத்தம் கொடுத்தவர் யார் தெரியுமா?

மாஸ்டர் படத்திற்காக தளபதி விஜய் பாடிய ஒரு குட்டி கதை என்ற பாடல் சற்று முன் வெளியாகி மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் ரசிகர்கள் இந்த பாடலை உலக அளவில் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

குழந்தைகள் மற்றும் இளைஞர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ள இந்த பாடல் திரையுலகினர்களையும் விட்டுவைக்கவில்லை. ஒட்டுமொத்த திரையுலகமும் இந்த பாடல் குறித்த பதிவுகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த பாடலில் உள்ள இரண்டு வரிகளை பதிவு செய்து அத்துடன் ஒரு புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் அட்லிக்கு ப்ரியா முத்தம் கொடுப்பது போல் உள்ளது. இந்த புகைப்படமும் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற பிரியா பதிவு செய்துள்ள அந்த வரிகளும் மிக பொருத்தமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Life is very short nanbaaaaa, always be happyyyyyyy என்ற மாஸ்டர் பாடல் வரிகளை பதிவு செய்து கணவர் அட்லிக்கு காதலர் தின வாழ்த்துக்களை கூறிய ப்ரியாவுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News