×

வில்லன் தோற்றத்தில் பிரபல காமெடி நடிகர் - யாருன்னு அடையாளம் தெரியுதா?

புதிய தோற்றத்தில் வைரலாகும் நடிகர் சந்தானம்

 

பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக மாறியவர் நடிகர் சந்தானம். கடந்த சில வருடங்களாகவே அவர் கதாநாயகனாக மட்டுமே நடித்து வருகிறார். தற்போது அவர் கார்த்திக் யோகி என்பவரின் இயக்கத்தில் அவர் டிக்கிலோனா என்கிற திரைப்படத்தில் அவர் நடித்துள்ளார்.

இப்படம் கால எந்திரம் பற்றிய கதையுடன் உருவாகியுள்ளது. இப்படத்தில் சந்தானம், யோகிபாபு, ஹர்பஜன் சிங், அனாகா, ஷெரின் காஞ்ச்வாலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் சந்தானம் 3 வேடங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் அமோகா வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்ப்போது சந்தானம் தாடி, மீசை , நீளமான முடி, என காமெடியன் தோற்றத்தில் இருந்து முற்றிலும் வில்லன் கெட்டப்பிற்கு மாறியுள்ளார். இந்த நியூ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. சிலர் பெரும் குழப்பத்திற்கு பிறகு அடையாளம் கண்டு அட நம்ம சந்தானமா இது? என வியப்படைந்துவிட்டனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News