×

தளபதி படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1991ஆம் ஆண்டு வெளியான படம்தான் தளபதி. இப்படத்தில் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும் இணைந்து நடித்திருந்தனர்.
 
Rajini

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1991ஆம் ஆண்டு வெளியான படம்தான் தளபதி. இப்படத்தில் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும் இணைந்து நடித்திருந்தனர். நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் அந்த சமயத்தில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Rajinikanth
Rajinikanth

இயக்குனர் மணிரத்னத்திற்கு மட்டுமல்லாமல் நடிகர் ரஜினிக்கும் இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் ரஜினியின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டது. அதுமட்டுமின்றி அவரது ரசிகர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்தது. தளபதி படம் ரஜினியின் திரை வரலாற்றில் ஒரு முக்கியமான படம் என்றும் கூறலாம்.

தன் நண்பனுக்காக எதையும் செய்யும் ஒரு துடிப்பான இளைஞனாக இப்படத்தில் ரஜினி நடித்திருப்பார். இவரது நடிப்பும், ஸ்டைலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதுவும் இப்படம் வெற்றிபெற ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம். இந்நிலையில் தற்போது இப்படத்தில் முதலில் நடிக்க தேர்வாகி பின் நடிக்க முடியாமல் போன நடிகர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

aravindsamy
aravindsamy

தளபதி படத்தில் ரஜினியும், மம்முட்டியும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், இப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்திருப்பார். இவரது கதாபாத்திரம் தான் இப்படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரமாக அமைந்திருக்கும். இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் ஜெயராம் தான் நடிக்க இருந்துள்ளார். ஆனால், கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியாமல் போகவே பின்னர் அரவிந்த்சாமி நடித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News