×

அதிரடி அரைசதத்துக்குப் பின் மண்டியிட்ட பாண்ட்யா ஏன் தெரியுமா?

நேற்றைய ஐபிஎல் போட்டியில் அரைசதம் அடித்த ஹர்திக் பாண்ட்யா கருப்பின மக்களின் வாழ்க்கை முக்கியம் என்பதை குறிக்கும் பொருட்டு மண்டியிட்டு தனது ஆதரவை தெரிவித்தார்.

 

நேற்றைய ஐபிஎல் போட்டியில் அரைசதம் அடித்த ஹர்திக் பாண்ட்யா கருப்பின மக்களின் வாழ்க்கை முக்கியம் என்பதை குறிக்கும் பொருட்டு மண்டியிட்டு தனது ஆதரவை தெரிவித்தார்.

நேற்று நடந்த பரபரப்பான மும்பை மற்றும் ராஜஸ்தான் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 60 ரன்களை சேர்த்தார். அப்போது அந்த இயக்கத்துக்கு ஆதரவு அளிக்கும் விதமாக சில நொடிகள் மண்டியிட்டார். எப்போதும் அரைசதம் அடிக்கும் பேட்ஸ்மேன்கள் பேட்டை உயர்த்திக் காட்டுவதுதான் வழக்கம். ஆனால் பாண்ட்யா இப்படி மண்டியிட்டது ஒரு நல்ல நோக்கத்துக்காகதான்.

அமெரிக்காவில் போலிசாரால் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட் மரணம் உலகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கருப்பின மக்கள் நிம்மதியாக வாழும் பொருட்டு black lives matter என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இது சம்மந்தமாக பலதுறையினரும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வந்தனர். அதற்கு தனது ஆதரவை அளிக்கும் விதமாகதான் பாண்ட்யா மண்டியிட்டு தனது ஆதரவை வெளிப்படுத்தினார். பாண்ட்யா அப்படி செய்த போது அணியின் கேப்டனும் கருப்பின வீரருமான கைரன் பொல்லார்டு சிரித்து தனது வாழ்த்துகளைக் கூறினார். அது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News