×

பிரபாஸ் படத்தின் வாய்ப்பை வேண்டாம் என சொன்ன ஒளிப்பதிவாளர்… ஏன் தெரியுமா?

பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாம் படத்தின் வாய்ப்பை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா வேண்டாம் என சொன்னது திரையுலகினரையே ஆச்சர்யப் படவைத்துள்ளது.

 

பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாம் படத்தின் வாய்ப்பை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா வேண்டாம் என சொன்னது திரையுலகினரையே ஆச்சர்யப் படவைத்துள்ளது.

விஜய்யின் 65 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்க உள்ளார். இந்த படத்தில் தமன்னா மற்றும் மடோன்னா செபாஸ்டியன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, முதன் முதலாக விஜய் படத்துக்கு எஸ் எஸ் தமன் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற மனோஜ் பரமஹம்சாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் முருகதாஸ். ஆனால் முருகதாஸ் கேட்ட தேதிகள் ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ள பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்தின் ஷூட்டிங்கும் விஜய் படத்தின் ஷூட்டிங்கும் ஒரே நேரத்தில் நடக்க இருப்பதால், பிரபாஸ் படத்தில் இருந்து விலகி விஜய் 65 படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

மிகப்பெரிய  பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இந்தியா முழுவதும் ரிலிஸாக இருக்கும் பிரபாஸ் படத்தை விட்டு விஜய் படத்துக்கு வந்துள்ளாரே என திரையுலகமே அதிர்ச்சியில் உள்ளதாம்.

From around the web

Trending Videos

Tamilnadu News