×

பிகில் படத்தை போட்டு காட்டி சிறுவனுக்கு அறுவை சிகிச்சை... வைரலாகும் வீடியோ...

 
bigil

சென்னை மயிலாப்பூரில் வசிக்கும் சசிவர்ஸன் என்கிற 10 வயது சிறுவன் அவனது மாமாவுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்து ஏற்பட்டது. இதில்,சிறுவனின் நேற்றி, முகத்தில் பலத்த அடிபட்டது. எனவே, சிறுவன் ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். 

மருத்துவர்கள் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க முயன்ற போது பயந்த சிறுவன் அவர்களை சிகிச்சை அளிக்க அனுமதிக்கவில்லை. குறிப்பாக மயக்க ஊசி போட மருத்துவர்களை அவன் அனுமதிக்கவில்லை. எனவே, என்ன செய்வது என மருத்துவர்கள் யோசித்து கொண்டிருந்த போது, அங்கிருந்த ஒருவர் சிறுவனிடம் உனக்கு என்ன பிடிக்கும் என பேச்சு கொடுத்தார்.

அப்போது சிறுவன் தனக்கு விஜய் மிகவும் பிடிக்கும் எனக்கூறியதோடு, விஜய் படத்தில் பேசிய வசனங்களை அவன் பேசி காட்டினார். உடனே அவர் தனது மொபைலில் இருந்த பிகில் திரைப்படத்தை அவனிடம் காண்பித்தார். தலையில் ரத்தம் ஒழுகும் நிலையிலும் அந்த சிறுவன் பிகில் படத்தை பார்த்துக்கொண்டிருக்க, மருத்துவர்கள் அவனுக்கு மயக்க ஊசி போட்டு சிகிச்சை அளித்தனர்., அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News