×

டாக்டர் படம் ஓடிடியா? யார் சொன்னது?.... மறுக்கும் தயாரிப்பாளர்...
 

 
doctor

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் டாக்டர். இப்படம் கடந்த வருடமே தியேட்டரில் வெளியாகவிருந்த நிலையில் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

doctor

இதனிடையே இப்படம் OTT-யில் வெளியாகும் என ஒருபக்கம் செய்தியும், திரையரங்கில் தான் வெளியாகும் என படக்குழுவினரும் கூறி வந்தனர்.  2 நாட்களுக்கு முன்பு ‘டாக்டர்’ திரைப்படம் Disney Hotstar-ல் நேரடியாக வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது.மேலும் இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு Hotstar-ல் வெளியாவதாக கூறப்பட்டது.

doctor

இந்நிலையில் இந்த செய்தியை இப்படத்தின் தயாரிப்பாளர் மறுத்துள்ளார். இப்படத்தை தியேட்டரில் வெளியிடுவது எங்களின் முதல் முன்னுரிமை. சிவகார்த்திகேயனும் இதைத்தான் விரும்புகிறார். எனவே, தியேட்டர் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆனால், எங்கள் வியாபாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. முடிவுக்கு வந்த பின்னரே தியேட்டரில் வெளியிடுவதா? இல்லை ஓடிடியில் வெளியிடுவதா? என்பதை முடிவு செய்வோம் என விளக்கமளித்துள்ளார்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News