×

நேரடியாக OTT-யில் வெளியாகிறது சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படம்..

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு Hotstar-ல் வெளியாக இருக்கிறது.

 
9c315532-2c97-42ad-9f57-2fbeb71beea9

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் டாக்டர்.

இப்படம் வெளியாகவிருந்த நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த சோகத்திற்கு உள்ளாகினர்.

இதனிடையே இப்படம் OTT-யில் வெளியாகும் என செய்தி பரவியதை தொடர்ந்து, டாக்டர் படம் திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்பதை உறுதியளித்தனர் படக்குழுவினர்.

ஆனால் தற்போது டாக்டர் திரைப்படம் Disney Hotstar-ல் நேரடியாக வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு Hotstar-ல் வெளியாக இருக்கிறது.

பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் தான் டாக்டர் படத்தையும் இயக்கியுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News