×

டாக்டர் படத்தின் ’"நெஞ்சமே" பாடல் ரிலீஸ்!

ஹீரோ படத்தின் தோல்விக்குப் பிறகு சிவகார்த்திகேயன் தற்போது அயலான் மற்றும் டாக்டர் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இதில் டாக்டர் படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். KJR ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

 

கேங் லீடர் என்ற தெலுங்கு படத்தில் நடித்த ப்ரியங்கா மோகன் இப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் வினய்,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அத்துடன்  "செல்லம்மா" என்ற முதல் சிங்கிள் ட்ராக் வெளியாகி யூடியூபில் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிளாக "நெஞ்சமே" என்ற பாடல் யுடியூபில் ரிலீஸ் ஆகியுள்ளது.  அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்பாடலின் வரிகள் நெஞ்சை உருக்குகிறது. இந்த பாடலின் வீடியோ எஸ்கே ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News