×

கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா?
 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 162 நாடுகளில் பரவியுள்ளது. மொத்தமாக 2 லட்சம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 

அதேபோல், இந்தியாவிலும் பலரும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக 2635 பேர் அவரது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவகிறார்கள்.

இந்நிலையில், கொரோனா விவகாரத்தில் இந்தியா எந்த நிலையில் இருக்கிறது என்பது பற்றி இந்திய மருத்துவ கவுன்சில் இயக்குனர் பலராம் பார்கவா விளக்கம் அளித்துள்ளார்.

முதல் கட்டம் : கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு வருபவர்கள் மூலமாக பரவுவது.

2வது கட்டம் : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து அவரின் குடும்பத்தினருக்கோ, நண்பர்களுக்கோ கொரோனா தொற்று பரவுவது. இதில் குறைவான நபர்களே பாதிக்கப்படுவார்கள். யாரிடம் இருந்து தொற்று ஏற்பட்டிருப்பது என்பதை சுலபமாக கண்டறிய முடியும். அதை வைத்து வைரஸ் மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க முடியும். 

3வது கட்டம்: இதை சமூகத்தொற்று என்று கூறுவோம். யார் மூலம் தொற்று ஏற்பட்டது என்பதே தெரியாமல் சமூகத்தில் பாதிக்கப்பட்டவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுவது. இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் 3ம் கட்டத்தில் இருக்கின்றன.

4வது கட்டம் : இருப்பதிலேயே இதுதான் மிகவும் மோசமான நிலை. எப்போது ஒருவரை பாதிக்கும், எப்ப்போது குணமாகும் என்றே தெரியாமல் ஏற்படும் பேரிடர். சீனாவில் இதுதான் நடந்தது.

இந்தியாவை பொறுத்தவரை 'நாம் 2வது கட்டத்தில் இருக்கிறோம்.  3ம் கட்டத்திற்கு சென்றுவிட மாட்டோம் என நம்புகிறேன். சர்வதேச எல்லைகளை மூடுவது உள்ளிட்ட அரசு எடுக்கும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக 3ம் கடத்திற்குக் செல்லாமல் தடுக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News