×

இந்த அவமானம் ரஜினிக்கு தேவையா..? வச்சு செய்யும் நெட்டிசன்கள்..

 

நடிகர் ரஜினி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ஏப்ரல் - செப்டம் மாதம் வரை மாநகராட்சி சார்பில் விதிக்கப்பட்ட சொத்துவரி ரூ.6.5 லட்சத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக ஏப்ரல் மாதம் முதலே தனது மண்டபத்தில் திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எதுவும் நடைபெறவில்லை என்பதால் சொத்துவரியை பாதியாக குறைத்து உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

ஆனால், இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்த போது, இதுபோன்ற வழக்குகளை தொடர்ந்து நீதிமன்றத்தை நேரத்தை வீணடிக்க வேண்டாம் என நீதிபதி எச்சரித்தார். மேலும், வழக்கை வாபஸ் பெறவில்லை எனில் அபராதம் விதிப்பேன் என எச்சரித்தார். இதனால், ரஜினி தனது வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து. ரஜினிக்கு இந்த அவமானம் தேவையா.. அவரிடம் ஒரு 6 லட்ச ரூபாய் இல்லையா.. தொழில்தான் முடங்கிதே தவிர, சொத்துவரியில் எதற்கு விலக்கு கேட்கிறார்? சொத்து என்பது ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டேதானே போகிறது.. என நெட்டிசன்கள் அவரை சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.


 


 

From around the web

Trending Videos

Tamilnadu News