×

ரஜினிக்கு இந்த அவமானம் தேவையா? - வீடியோவை டெலிட் செய்த டிவிட்டர்

கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் மக்களுக்காக பேசி வெளியிட்ட வீடியோவை டிவிட்டர் நீக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

நாடெங்கும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், இந்தியாவில் கொரோனா வைரஸ் 2வது நிலையில் இருக்கிறது. இது 3வது இடத்திற்கு செல்லாமல் தடுக்கவே 14 மணி நேரம் வெளியே வரவேண்டாம் என மோடி கூறியுள்ளார். எனவே மக்கள் வெளியே வர வேண்டாம் என பேசி ஒரு வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

ஆனால், ரஜினி கூறிய இந்த தகவல் அறிவியலுக்கு எதிரானது எனக்கூறி டிவிட்டர் நிறுவனம் அந்த வீடியோவை நீக்கிவிட்டது. இது ரஜினி ரசிகர்கள், மற்றும் பாஜக ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி பேசிய வீடியோ இதுதான் :

From around the web

Trending Videos

Tamilnadu News