×

என்னது கருப்பர் கூட்டத்துக்கு திமுக ஆதரவா? யார் கிளப்பிவிட்டது- ஆர் எஸ் பாரதி விளக்கம்!

கருப்பர் கூட்டம் யுட்யூப் சேனலுக்கு திமுக சட்டரீதியாக ஆதரவளிக்கும் என பரவிய செய்தி உண்மை இல்லை என ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

 

கருப்பர் கூட்டம் யுட்யூப் சேனலுக்கு திமுக சட்டரீதியாக ஆதரவளிக்கும் என பரவிய செய்தி உண்மை இல்லை என ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

கடந்தவாரத்தில் கருப்பர் கூட்டம் என்ற யுட்யூப் சேனல் 6 மாதங்களுக்கு முன்னால் வெளியிட்ட கந்த சஷ்டி கவசம் பற்றிய வீடியோ ஆபாசமாக இருப்பதாக சொல்லி அந்த சேனலை தடை செய்யவேண்டும் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதையடுத்து அந்த சேனலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் கருப்பர் கூட்டம் சேனலுக்கு திமுக சட்டப்பூர்வமாக ஆதரவு அளிக்கும் என திமுக தலைவர் ஸ்டாலினின் டிவிட்டர் கணக்கில் இருந்து தெரிவித்ததாக ஒரு புகைப்படம் வெளியானது.

இதனை இப்போது திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி மறுத்துள்ளார். இது சம்மந்தமாக ‘திமுக மீதும் தலைவர் மு..ஸ்டாலின் மீதும் அவதூறான பிரச்சாரங்களை செய்ய திட்டமிட்டு ஒரு கூட்டம் அண்மைக் காலமாக செயல்பட்டு வருகிறது. ஸ்டாலினுக்கு நாளுக்கு நாள் பெருகி வரும் பேராதரவை தாங்கிக் கொள்ளமுடியாத அவ்வயிற்றெரிச்சல் காரர்கள் இப்படிப்பட்ட விஷமத்தனமான பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

முருகனை இழிவுபடுத்திப் பேசியிருக்கிற கறுப்பர் கூட்டத்துக்கு சட்ட ரீதியாக திமுக ஆதரவு தெரிவிக்கும்என்று போலியான பொய்யான பித்தலாட்ட செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். இதேபோல ஏற்கனவே செயல்பட்டவர்கள் மீது சைபர் க்ரைம் பிரிவில் புகார் கொடுத்தேன். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. முருகரை பழித்துப் பேசியது கண்டிக்கத் தக்கது என்பதை திமுக உள்ளிட்ட பல கட்சியினரும் கூறியிருக்கிறார்கள். எங்கள் முதன்மைச் செயலாளர் கே.என். நேரு அறிக்கையே வெளியிட்டார்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அண்ணாவின் கொள்கையின் அடிப்படையில் 70 ஆண்டு காலமாக திமுக செயல்பட்டு வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன்தான் கும்பகோணம் மகாமகம் நடத்தினோம் என்று சிறியவர்களுக்குத் தெரியாது, ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர் கலைஞர். மயிலாப்பூர் குளத்தை தலைப்பாகை கட்டிக் கொண்டு தூர்வாரியவர் கலைஞர். இதெல்லாம் தெரியாத குள்ள நரிக் கூட்டம் தமிழகத்துக்குள் குறுக்கு வழியில் உள்ளே நுழைய பார்க்கிறார்கள். திமுகவில் இருக்கும் ஒன்றரை கோடி உறுப்பினர்களில் ஒரு கோடி பேர் இந்துக்கள். இதையெல்லாம் தெரிந்தும் சிலர் திமுக மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்கள். இந்த போலி ட்விட்டர் பற்றி நாளை மறுநாள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க இருக்கிறோம். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றம் செல்வோம்

திமுக, கொரோனா, கருப்பர் கூட்டம், DMk, corona, karuppar koottam

From around the web

Trending Videos

Tamilnadu News