×

சிறுத்தையுடன் டாய்லெட்டில் சிக்கிய தெருநாய்... என்ன நடந்தது தெரியுமா?

கர்நாடகாவில் வீடு ஒன்றின் டாய்லெட்டில் சிறுத்தையுடன் பலமணிநேரம் தெருநாயொன்று அடைபட்டுக் கிடந்திருக்கிறது. 
 

மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டிய தக்‌ஷின கன்னடா மாவட்டத்தின் பல பகுதிகளில் பொதுமக்கள் வசிப்பிடங்களுக்குள் காட்டுவிலங்குகள் அவ்வப்போது புகுந்து விடுவதுண்டு. அப்படி ஒரு சம்பவம்தான் நேற்று நடந்திருக்கிறது. அந்த மாவட்டத்தின் மலைப்பகுதியை ஒட்டிய பில்னெலி கிராமத்துக்குள் சிறுத்தை ஒன்று நேற்று புகுந்தது. 

அப்போது வீடு ஒன்றில் டாய்லெட்டில் சிறுத்தை சிக்கிக் கொண்டது. கதவு மூடிக் கொண்டதால் சிறுத்தையால் டாய்லெட்டிலிருந்து வெளியே வர முடியவில்லை. அத்துடன், சிறுத்தையோடு தெருநாய் ஒன்றும் அந்த டாய்லெட்டில் சிக்கிக் கொண்டது. சிறுத்தைக்குப் பயப்படாமல் அந்த டாய்லெட்டில் பல மணிநேரங்களைக் கழித்த தெருநாய், உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறது. 


இந்தத் தகவல் தெரிந்ததும் மீட்புப் படையினர், வனத்துறையினர் ஆகியோர் டாய்லெட்டில் இருந்து சிறுத்தையை மீட்க முயற்சி எடுத்தனர். இதற்காக அவர்கள் முயற்சி செய்துகொண்டிருந்தபோது டாய்லெட்டின் கதவை உடைத்து அதிலிருந்து தப்பியோடியிருக்கிறது சிறுத்தை. அதன்பிறகு மீட்புக் குழுவினர் தெருநாயை மீட்டிருக்கிறார்கள். இந்த சம்பவத்தின் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

From around the web

Trending Videos

Tamilnadu News