Categories: Cinema News latest news

சூர்யாவை ஓவர்டேக் செய்த பிஸ்னஸ்…இப்ப சிவகார்த்திகேயன்தான் ரியல் டான்!…

விஜய் டிவியில் பணிபுரிந்தவர் சிவகார்த்திகேயன். மெரினா படம் மூலம் ஹீரோவாக மாறினார். அந்த படத்தில் அவர் வாங்கிய சம்பளம் ரூ.10 ஆயிரம் மட்டுமே. அதன்பின் படிப்படியாக முன்னேறி தற்போது ரூ.30 கோடி சம்பளம் பெறும் நடிகராக அவர் மாறியுள்ளார்.

அவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்து சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை தாறுமாறாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக லைக்கா தயாரிப்பில் அவர் நடித்துள்ள டான் திரைப்படம் படம் வெளியாவதற்கு முன்பே ரூ.55 கோடி வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பச்ச மண்ண இப்படி கெடுத்துப்புட்டாங்களே!…கவர்ச்சியில் இறங்கி அடிக்கும் மகள் நடிகை….

இப்படத்தின் பட்ஜெட் 45 கோடி. ஆனால், நெட்பிளிக்ஸ் நிறுவனம் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ.20 கோடிக்கு வாங்கியுள்ளது. அதேபோல், இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி ரூ.18 கோடிக்கு வாங்கியுள்ளது. இது சூர்யா படங்களின் வியாபாரத்தை விட அதிகமாகும்.

வியாபார வட்டாரங்கள் சொல்வதை பார்த்தால் இப்படத்தின் வியாபாரம் ரூ.100 கோடியை தாண்டி செல்லும் எனக்கணிக்கப்படுகிறது. எனவே, இனிமேல் சிவகார்த்திகேயன் படம் என்றாலே ரூ.100 கோடி வியாபாரம் உருவாகும் என நம்பப்படுகிறது.

இப்படம் மே மாதம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா