ரகுவரன் பத்தி கேட்காதீங்க - தொகுப்பாளரிடம் கோபப்பட்ட ரோகிணி?
தமிழ் சினிமாவில் 90ஸ் காலத்தில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை ரோகிணி. இவர் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஹீரோயினாக நடிப்பதற்கு முன்னதாக குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் .
தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக இருந்த ரகுவரனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரகுவரன் 2004 ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துவிட்டார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ரோகினியிடம் ரகுவரன் குறித்த கேள்வி கேட்டதற்கு...

நான் பலமுறை தொகுப்பாளர்களிடம் ரகுவரன் பற்றிய கேள்வி என்னிடம் கேட்காதீங்க என்று சொல்லிவிட்டேன். எனக்காக தனி அடையாளம் இருக்கிறது. நான் அவரைப் எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டேன். திரும்பத் திரும்ப அவரைப் பற்றிய கேட்கிறார்கள்.
அவருடன் வாழ்ந்தது ஒரு நல்ல அனுபவம். அவரது தீவிரமான ரசிகை நான் எனினும் தொடர்ந்து அவரைப் பற்றி என்னிடம் கேள்வி எழுப்பி அவரது சாயலில் என்னை அடையாளப்படுத்துவது எனக்கு பிடிக்கவில்லை என நடிகை ரோகினி வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்.
