×

விராட் கோலிக்கா டெக்னிக் தெரியாது ? பாகிஸ்தான் கேப்டன் சப்போர்ட் !

விராட் கோலி இன்ஸ்விங் பந்துகளை அடிக்க முடியாமல் கஷ்டப்படுவதாக எழுந்த விமர்சனங்களுக்கு பாகிஸ்தான்  முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பதிலளித்துள்ளார்.

 

விராட் கோலி இன்ஸ்விங் பந்துகளை அடிக்க முடியாமல் கஷ்டப்படுவதாக எழுந்த விமர்சனங்களுக்கு பாகிஸ்தான்  முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பதிலளித்துள்ளார்.

நியுசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி மிக மோசமாக தோல்வி அடைந்தது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில் கடைசி போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் கேப்டன் கோலி இன்ஸ்விங் பந்துகளில் எல் பு டபுள் யூ முறையில் அவுட் ஆனதால் அவருக்கு இன்ஸ்விங் பந்துகளை விளையாட தெரியவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் ’70 சதங்களை அடித்த ஒருவருக்கு டெக்னிக் தெரியவில்லை என நாம் சொல்ல முடியாது. அவருக்கு நான் எதாவது சொல்ல வேண்டும் என்றால் கவலைப்படாமல் இருங்கள் என்றுதான் சொல்வேன். அவர் மன வலிமை மிக்க வீரர். சில நேரங்களில் நமது வலிமையே எதிர்மறையாக அமையும். அதனால் இதுவும் கடந்து போகும்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News