×

உன் மூஞ்சிய பார்த்தாலே யாரும் தியேட்டருக்கு வரமாட்டாங்க - விஜய் சேதுபதியை அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்!

தமிழ் சினிமாவின் வெற்றி கதாநாயகனாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி சினிமாவில் சாதாரணமாக உழைத்து இந்த இடத்திற்கு வந்தவர் அல்ல. பெரிய நடிகர், நடிகைகளின் வாரிசுகள் போட்டி போட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் முழுக்க முழுக்க தனது திறமையாலும், முயற்சியாலும் முன்னேறி வந்தவர்.

 

சினிமா மீது இருந்த ஆசையில் கூத்துப்பட்டறையில் கணக்காளராக பணியில் சேர்ந்து அங்கு நடிப்பு கலையை கொஞ்சம் கொஞ்சமாக கற்று தெரிய விஜய் சேதுபதிக்கு ஆரம்பகாலத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது எதையும் அசாதாரணமாக எண்ணாமல் அத்தனை வாய்ப்பையும் மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டார்.தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக கால் பதித்த விஜய் சேதுபதி இன்று கோலிவுட்டில் தவிர்க்கமுடியாத கதாநாயகன், வில்லன் என வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ஆரம்பகாலத்தில் பிரபல தயாரிப்பாளரிடம் பட ரிலீஸிற்காக உதவி தேடி சென்ற விஜய் சேதுபதியை உன் முகத்தை போஸ்டரில் பார்த்தாள் கூட ஒருவரும் திரையரங்கு உள்ளே வர மாட்டார்கள் என்று கூறி அவமானப்படுத்தியுள்ளார். உடனே விஜய் சேதுபதி ஒன்றும் பேசாமல் அந்த இடத்தை விட்டு சென்றாக  பிரபல யூட்யூப் விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News