தவறான முடிவு எடுக்காதே... ரவி மோகனுக்கு மூத்த நடிகை ஆறுதல்!

 
ravi mohan

நடிகர் ரவி மோகன்: 

அண்மையில் நடிகர் ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்து தனது குடும்ப பிரச்சனை குறித்தும் மனைவியுடன் விவாகரத்து பிரச்சனையும் தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் மேலும் நான் இந்த திருமண வாழ்க்கையில் முழுவதுமாக ஏமாந்து விட்டேன் என்றும் கூறி கதறி அழுது கத்தி தன் கோபத்தை வெளிப்படுத்திருந்தார். 

இது ஒட்டுமொத்த திரையுலக ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எப்படிப்பட்ட மனிதனின் வாழ்க்கையை இப்படி அழித்துவிட்டார்களே என்று பலரும் திட்டி இருந்தார்கள். மேலும் ரவி மோகன் இந்த மன உளைச்சலில் இருந்து மீண்டு வர முடியாமல் தன்னைத்தானே வருத்திக் கொள்வதாகவும் தன்னுடைய கைகளை அறுத்துக் கொண்டதாகவும் அதே வீடியோவில் தெரிவித்து இருந்தார் .

ஆறுதல் கூறிய நடிகை: 

இந்த நிலையில் ரவி மோகனின் இந்த மன உளைச்சலான நேரத்தில் பிரபல மூத்த நடிகை ஒருவர் அவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். ஆம் நடிகர் அம்பிகா தனது ட்விட்டர் தளத்தில்....ரவி நீ முதலில் பலவீனமாக உணராதே. எல்லாமே சரியாகிடும். 

ambika

கடவுள் உன்னை சோதிக்கிறார். கொஞ்ச நாள் தாமதிக்கிறார் அப்படின்னு நீ நெனச்சுக்கோ. தயவுசெய்து எக்காரணத்தை கொண்டும் தவறான முடிவு மட்டும் எடுத்து விடாதே. உன்னை நீயே காயப்படுத்தி கொள்ளாதே.

குழந்தைகள் மீது வைத்திருக்கிற அந்த பாசம் தான் உன்னோட வாழ்க்கை மீதான மிகப்பெரிய பிரியத்தை உனக்கு கொண்டுவரும். கடவுளிடம் நன்றாக வேண்டிக்கொள் நல்லா பாத்துக்கோ உனக்கு பிடித்த அப்பா அம்மா அல்லது உன்னை நன்கு அறிந்தவர்களுடன் நீ இரு என்று பதிவிட்டு அவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். நடிகை அம்பிகாவின் இந்த கருத்து ஜெயம் ரவி ரசிகர்களுக்கும் இதமாக இருப்பதாகவும் ரவி மோகனுக்காக நாங்களும் பிரார்த்திக்கிறோம் என கூறுகிறார்கள்.

Tags

From Around the web