கோலிவுட்டின் மாபெரும் டைரக்டர்கள்… விஜயகாந்தின் மிஸ் பண்ணவே கூடாத இரண்டு படங்கள்…
Aug 25, 2024, 20:00 IST
தமிழ் சினிமாவின் லெஜண்டரி நடிகர் மனிதாபிமானி கேப்டன் விஜயகாந்த். அதேபோல், இயக்குநர்களில் மணிரத்னமும் கே.எஸ்.ரவிக்குமாரும் பல நடிகர்களுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த வரலாறு உண்டு. கேப்டன் விஜயகாந்த்துக்கும் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார் கனெக்ஷன் பற்றிதான் பார்க்கப்போகிறோம். விஜயகாந்த் - மணிரத்னம் தமிழுக்கு வருவதற்கு முன்பே கன்னடத்தில் பல்லவி அனுபல்லவி மற்றும் மலையாளத்தில் உன்னாரு படங்களை எடுத்துவிட்டிருந்தார் இயக்குநர் மணிரத்னம். 1985-ல் வெளியான பகல்நிலவுதான் மணிரத்னத்தின் முதல் தமிழ்படம். அந்தநேரத்தில் கேப்டன் விஜயகாந்த் தமிழின் முக்கியமான ஹீரோ அந்தஸ்துக்கு உயர்ந்திருந்தார். இதையும் படிங்க: இது எப்ப நடந்துச்சி!.. பல வருடங்கள் கழித்து தனுஷுடன் சிவகார்த்திகேயன்!.. வைரல் போட்டோ!…
KS Ravikumar - Maniratnam
விஜயகாந்த் - கே.எஸ்.ரவிக்குமார் மணிரத்னம் போலல்லாமல் கே.எஸ்.ரவிக்குமார் விஜயகாந்த்தை வைத்து ஒரு படமே இயக்கியிருக்கிறார். நாட்டாமை, முத்து, அவ்வை ஷண்முகி என வரிசையாக மிகப்பெரிய ஹிட் படங்களை கே.எஸ்.ரவிக்குமார் கொடுத்திருந்த நேரம் அது. அப்போது விஜயகாந்துடன் அவர் இணைந்து எடுத்த படம்தான் தர்மசக்கரம். குறிப்பாக அவ்வை ஷண்முகிக்குப் பிறகு இந்தப் படம் வெளியானது. இதையும் படிங்க: விஜய் படத்துக்கு அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை… வழக்கம்போல தெறிக்கவிடுமா?
விஜயகாந்தை மணிரத்னம் தனது படத்தில் நேரடியாக இயக்காவிட்டாலும், இன்னொரு ஒற்றுமை இவர்களுக்கு இடையில் உள்ளது. 1990-ல் மணிரத்னம் எஸ்.ஸ்ரீராமுடன் இணைந்து ஆலயம் புரடக்ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருந்தார். அதேநேரம், இயக்குநர் சுபாஷ் விஜயகாந்துக்காக ஒரு போலீஸ் கதையை உருவாக்கி தயாரிப்பு நிறுவனத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தார்.
KS Ravikumar - Maniratnam
அந்தக் கதையை கேட்டு மணிரத்னம் தயாரிக்க முன்வந்திருக்கிறார். அந்தப் படம்தான் ஆலயம் புரடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த முதல்படம். அதுதான் விஜயகாந்தின் ஆல்டைம் ஃபேவரைட் ஹிட்டான சத்ரியன். பழைய பன்னீர்செல்வமா வரணும் என்கிற இன்றளவும் ஃபேமஸான வசனம் இடம்பெற்ற படம்தான் சத்ரியன்.
அன்பே சிவம், பகவதி, புதுப்பேட்டை, உன்னை நினைத்து போன்ற குறிப்பிடத்தக்க படங்களை பின்னாளில் தயாரித்து லஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்தான் தர்ம சக்கரம் படத்தின் தயாரிப்பு நிறுவனம். 1997-ம் ஆண்டு மின்சாரக் கனவு, பெரிய தம்பி, இருவர் மற்றும் பாரதி கண்ணம்மா போன்ற படங்களோடு ரிலீஸான தர்ம சக்கரம் படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிபெற்றது.
